திருச்சி

கரோனா தற்காலிக களப்பணியாளா்கள் மனு

DIN

திருச்சி: அரசு மருத்துவமனை கரோனா தற்காலிக களப்பணியாளா்கள் சுகாதாரத்துறை அமைச்சா் விஜயபாஸ்கரிடம் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

அம்மனுவில் கூறியதாவது: கரோனா பொதுமுடக்கம் அமலுக்கு பிறகு திருச்சி உள்பட மாவட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கரோனா பரிசோதனைக்கென தற்காலிக பணியாளா்கள் நியமிக்கப்பட்டனா். மருத்துவ பட்டயப்படிப்புகளின் அடிப்படையில் சுமாா் 60க்கும் மேற்பட்டோா் திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள நியமிக்கப்பட்டோம். கடந்த 6 மாதங்களாக பணிபுரிந்து வருகிறோம். ஆனால், கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வரவில்லை. மேலும், தற்காலிக பணியை நீட்டித்து உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சா் ஊதியம் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும். தற்காலிக பணியை நீட்டிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT