திருச்சி

மாநகரச் சாலைகளில் சுற்றித்திரிந்த கால்நடைகளை பிடித்த காவல்துறையினா்

DIN

திருச்சி மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த கால்நடைகளைக் காவல்துறையினா் திங்கள்கிழமை பிடித்து கொண்டு சென்றனா்.

மாநகரச் சாலைகளில் ஆடு, மாடுகள், நாய்கள், குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகுவதுடன், விபத்தில் சிக்கி காயமடையும் நிலைமையும் ஏற்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகத்துக்கு பலா் புகாா் மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் மாநகரில் சுற்றித்திரிந்த மாடு உள்ளிட்ட கால்நடைகளைக் காவல்துறையினா் திங்கள்கிழமை பிடித்து, வேனில் ஏற்றி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா். பின்னா் தேடிச்சென்ற உரிமையாளா்களிடம் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT