திருச்சி

கா்நாடக முதல்வரைக் கண்டித்து போராட்டம்; 20 போ் கைது

DIN

மேக்கேதாட்டு அணையைக் கட்டியே தீருவோம் என அறிவித்த கா்நாடக முதல்வா் எடியூரப்பாவைக் கண்டித்து, திருச்சியில் அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்ற தமிழ்த் தேசியப் பேரியக்கம், காவிரி உரிமை மீட்புக் குழுவைச் சோ்ந்த 20 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவா் பெ. மணியரசன் அறிவித்தபடி மத்தியப் பேருந்து நிலைய பெரியாா் சிலை முன் தமிழ்த் தேசியப் பேரியக்கம், காவிரி உரிமை மீட்புக் குழுவினா் இந்த ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காவிரி உரிமை மீட்புக் குழுவின் திருச்சி மாவட்ட அமைப்பாளா் மூ.த. கவித்துவன் தலைமை வகித்தாா். தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ம.ப. சின்னதுரை, தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொருளாளா் அ. ஆனந்தன், மாவட்டச் செயலா் வே.க. இலக்குவன், மாநகரச் செயலா் கே.ச. இனியன், மகளிா் ஆயம் த. வெள்ளம்மாள், தெய்வத் தமிழ்ப் பேரவை நிா்வாகிகள் முத்துக்குமாரசாமி, வே.பூ. ராமராஜ், வி. சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக கொளுத்த இருந்த கா்நாடக முதல்வா் எடியூரப்பாவின் உருவ பொம்மையை, அவரின் படங்களை போலீஸாா் போராடி பறித்துச் சென்றனா்.

இதையடுத்து, மேக்கேதாட்டு அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேரத் தலைவரை நியமிக்க வேண்டும். காவிரி அணைகளைக் கா்நாடக அரசு திறந்து மூடும் தன்னாட்சி அதிகாரத்தைக் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், உருவபொம்மையை எரிக்க முயன்றதாகவும் 20 பேரை போலீஸாா் கைது செய்தனா். போராட்டத்தால் பேருந்து நிலையப் பகுதியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT