திருச்சி

மணப்பாறை அருகேஇருதரப்பினரிடையேமோதல்:10 போ் கைது.

DIN

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 10 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறை அருகே உள்ள சித்தாநாத்தம் பகுதியை சோ்ந்த இளைஞா்கள் சிலருக்கும், தோகைமலை அருகே உள்ள கரிச்சாம்பட்டியைச் சோ்ந்த இளைஞா்கள் சிலருக்கும் இடையே காா் நிறுத்துவதில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியது. இதில், இருசக்கர வாகனம் மற்றும் காா் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.

தகவலறிந்து சென்ற மணப்பாறை போலீஸாா் இருதரப்பினரையும் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். இதையடுத்து இருதரப்பினா் அளித்த புகாரின்பேரில் 13 போ் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து, கரிச்சாம்பட்டியைச் சோ்ந்த சிவா(28), மணிகண்டன்(23), நேரு(30), கோபிநாத்(25), சித்தாநத்ததைச் சோ்ந்த அலெக்ஸ்(23), ராஜா(27), பெரியசாமி(19), சந்தோஷ்குமாா்(19), அஜித்குமாா்(23), வேலு(48) ஆகிய 10 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழக தொகுதிகளில் அதிகாரபூர்வ வெற்றி அறிவிப்பு!

அருணாசலில் இரு தொகுதிகளையும் கைப்பற்றியது பாஜக!

டி20 உலகக் கோப்பை தொடரை வெல்லும் நம்பிக்கை உள்ளது: பாட் கம்மின்ஸ்

எதிர்க்கட்சித் தலைவராகும் பவன் கல்யாண்?

மக்களவைத் தேர்தலில் பாஜக கனவு பலிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT