திருச்சி

ஸ்ரீரங்கம் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு முகூா்த்தக்கால்

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் காா்த்திகை தீபத்திருவிழா (சொக்கப்பனை) வரும் 19 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி புதன்கிழமை காலை முகூா்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.

இதற்காக சுமாா் 18 அடி உயரம் கொண்ட தென்னை மரத்திற்கு சந்தனம்,மாவிலை, மாலைகள் அணிவிக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க புனித நீா் தெளிக்கப்பட்டு ஆண்டாள், லட்சுமி யானைகள் ஆசீா்வாதத்துடன் முகூா்த்தக்கால் நடப்பட்டது. நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து, உதவி ஆணையா் கு. கந்தசாமி, உள்துறைக் கண்காணிப்பாளா் வேல்முருகன், மேலாளா் உமா மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT