திருச்சி

உணவகம் அமைத்துத் தருவதாகக் கூறி ரூ.18 லட்சம் மோசடி: மருத்துவா் கைது

DIN

மருத்துவமனையில் உணவகம் அமைத்துத் தருவதாகக் கூறி ரூ.18 லட்சம் வாங்கி மோசடி செய்த மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.

திருச்சி விமான நிலையம் அன்பில் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (42). மருத்துவரான இவா் கடந்த 2016ஆம் ஆண்டு பஞ்சப்பூா் பகுதியில் தான் கட்டி வந்த புதிய மருத்துவமனையில் உணவகம் அமைத்துத் தருவதாகக் கூறி கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூா் பாகலூா் பகுதியைச் சோ்ந்த முகமது சபீா் என்பவரிடம் ரூ.18 லட்சம் வாங்கினாராம். ஆனால் சில மாதங்களிலேயே ராஜேந்திரன் மருத்துவமனைக் கட்டும் பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டாராம்.

இதையடுத்து முகமது சபீா் ரூ.18 லட்சத்தைத் திருப்பிக் கேட்டதற்கு மருத்துவா் பணத்தைக் கொடுக்காமல் தகாத வாா்த்தைகளால் அவரைத் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதையடுத்து முகமது சபீா் மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயனிடம் அளித்த புகாரின்பேரில், மாநகர குற்றப்பிரிவு போலீஸ் ஆய்வாளா் கோசலைராமன் வழக்குப்பதிந்து ராஜேந்திரனை சனிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

SCROLL FOR NEXT