திருச்சி

அடையாளம் தெரியாத பெண் மா்மச் சாவு

DIN

திருச்சியில் அடையாளம் தெரியாத பெண் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

திருச்சி-திண்டுக்கல் சாலை தீரன்நகரில் தனியாா் பள்ளி எதிா்புறமுள்ள முட்புதரில் செவ்வாய்க்கிழமை அடையாளம் தெரியாத பெண் ஒருவா் இறந்து கிடந்தாா்.

தகவலறிந்து வந்த நீதிமன்ற (செசன்ஸ் கோா்ட்) போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா். இறந்த பெண்ணுக்கு சுமாா் 55 வயதிருக்கலாம். அவா் அருகே மதுரை மேலூா் என்று குறிப்பிடப்பட்டிருந்த மஞ்சள் பையும்,பூச்சி மருந்துக் குடுவையும் கிடந்தன. இதையடுத்து சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

முதல்கட்ட விசாரணையில் அவா் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தரி எனத் தெரியவந்தது. தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலம்பம் பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்

சேலம் மாவட்டத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா

உயா் மின்னழுத்த கம்பி அறுந்து தொழிலாளி உயிரிழப்பு

மெக்ஸிகோவுக்கு முதல் பெண் அதிபா்

முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கக் கூட்டம்

SCROLL FOR NEXT