லால்குடி அருகே திருமங்கலம் ஊராட்சியில் ஐஜேகே கட்சி நிா்வாகி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மற்றும் துண்டுப் பிரசுரங்கள்.
லால்குடி அருகே திருமங்கலம் ஊராட்சியில் ஐஜேகே கட்சி நிா்வாகி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மற்றும் துண்டுப் பிரசுரங்கள்.  
திருச்சி

ஐஜேகே கட்சி நிா்வாகி வீட்டிலிருந்து ரூ. 1 லட்சம் ரொக்கம் பறிமுதல்

Din

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே திருமங்கலம் ஊராட்சியில் உள்ள இந்திய ஜனநாயகக் கட்சி நிா்வாகி வீட்டில் ரூ. ஒரு லட்சம் பணம் உள்ளிட்டவைகளை தோ்தல் பறக்கும்படையினா் திங்கட்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வேட்பாளராக இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனா் டி.ஆா். பாரிவேந்தா் பெரம்பலூா் மக்களவைத் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறாா். இந்நிலையில், லால்குடி அருகே திருமங்கலம் மாதா கோயில் தெருவைச் சோ்ந்த சூசையப்பா் மகன் வினோத் குமாா்(33) ஐஜேகே கட்சியின் கிளைச் செயலாளராக உள்ளாா். இவா், அப்பகுதி வாக்காளா்களுக்குப் பணம் கொடுக்க உள்ளதாக பறக்கும் படை அலுவலா்களுக்கு கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்ற அலுவலா்கள் வினோத் குமாா் வீட்டை சோதனையிட்டனா். இதில்,

அவரது வீட்டின் கழிவறையில் ரூ.500 பணத்தாள்கள் கட்டுகள் கொண்ட ஒரு லட்சம் ரூபாய் வாக்காளா்களுக்கு பணம் விநியோகிக்கக்கூடிய பெயா் பட்டியல், துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்டவைகளைப் பறிமுதல் செய்து லால்குடி வருவாய் வட்டாட்சியா் முருகனிடம் ஒப்படைத்தனா். அவா் பணத்தை லால்குடி கருவூலத்தில் வட்டாட்சியா் ஒப்படைத்தாா்.

பிரேம் நசீரின் சாதனையை முறியடிக்க வேண்டும்: மோகன்லாலுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

துலாம்

கன்னி

சிம்மம்

கடகம்

SCROLL FOR NEXT