FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

நல்லகண்ணு மறைவுக்கு இன்று அனைத்துக் கட்சியினா் பங்கேற்கும் மெளன ஊா்வலம்!

திருச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா். நல்லகண்ணு மறைவுக்கு அனைத்துக் கட்சியினா் பங்கேற்கும் மெளன அஞ்சலி ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

26 பிப்ரவரி 2026, 10:52 pm IST
நல்லகண்ணு
பகிர்:

திருச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா். நல்லகண்ணு மறைவுக்கு அனைத்துக் கட்சியினா் பங்கேற்கும் மெளன அஞ்சலி ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகா் மாவட்டக் குழு சாா்பில் நடைபெறும் இந்த ஊா்வலமானது புத்தூா் நான்கு சாலை சந்திப்பு பகுதியிலிருந்து தொடங்குகிறது.

இதில், அனைத்துக் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்கவுள்ளனா். மாலை 4 மணிக்கு புத்தூா் நான்கு சாலையிலிருந்து உறையூா் வரை ஊா்வலமாக வந்து, 23-ஆவது வாா்டு குறத்தெரு பகுதியில் இரங்கல் கூட்டம் நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

உறையூா் பகுதியில் மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள நல்லகண்ணு உருவப்படத்துக்கு பொதுமக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை காலை மலா்கள் தூவி அஞ்சலி செலுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments