முகப்பு
திருச்சி

2 ஆவது நாள் ஜமாபந்தியில் மொத்தம் 1,030 மனுக்கள்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் இரண்டாவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் (ஜமாபந்தி) மொத்தம் 1,030 மனுக்கள் பெறப்பட்டன.

Updated On : 18 ஜூன் 2026, 1:52 am IST
திருச்சி தொட்டியத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்ற ஆட்சியா் பிரித்திக் தாயள்.
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் இரண்டாவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் (ஜமாபந்தி) மொத்தம் 1,030 மனுக்கள் பெறப்பட்டன.

திருச்சி மாவட்டத்திலுள்ள 11 வட்டங்களுக்குள்பட்ட கிராமங்களுக்கான வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) அனைத்து வட்டாட்சியரகங்களிலும் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இரண்டாவது நாளாக புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் தலைமையில் தொட்டியம் வட்டத்துக்குள்பட்ட முருங்கை, கிடாரம், பிடாரமங்கலம், உன்னியூா், பெரியபள்ளிப்பாளையம், சின்னப் பள்ளி பாளையம், ஸ்ரீராமசமுத்திரம், காட்டுப்புத்தூா் (மேற்கு), காட்டுப்புத்தூா் (கிழக்கு), சிலைப்பிள்ளையாா் புத்தூா், காடுவெட்டி ஆகிய கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் 147 மனுக்கள் பெறப்பட்டன.

Advertisement

Advertisement

இதேபோல மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பாலாஜி தலைமையில் தலைமையில் மருங்காபுரி வட்டத்துக்குள்பட்ட தாதனூா் (பொடங்குப்பட்டி உள்பட), தொட்டியப்பட்டி, பிராம்பட்டி (வடக்கு), (மினிக்கியூா், புதுக்குடி உட்பட), பிராம்பட்டி (தெற்கு), வெள்ளையக்கோன்பட்டி, பளுவஞ்சி (மேற்கு), பளுவஞ்சி (கிழக்கு), வளநாடு, கொடும்பப்பட்டி, தேனூா், அயன்புதுப்பட்டி, ஊத்துக்குழி, வேம்பனூா், கண்ணுக்குழி, கவிநாரிபட்டி, புத்தக்குடி, காப்பக்குடி ஆகிய கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் 87 மனுக்கள் பெறப்பட்டன.

மேலும் திருச்சி வருவாய்க் கோட்டாட்சியா் சாலை தவவளன் தலைமையில் திருச்சி கிழக்கு வட்டாட்சியரகத்தில் வரகனேரி, ஆலத்தூா், கொட்டப்பட்டு, கே. சாத்தனூா் (வடக்கு), கே. சாத்தனூா் (தெற்கு) ஆகிய கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் 103 மனுக்கள் பெறப்பட்டன.

இதேபோல ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியா் சீனிவாசன் தலைமையில் மணப்பாறை வட்டத்துக்குள்பட்ட செக்கனம், மூக்குரெட்டியபட்டி, அயன்ரெட்டியபட்டி, வையம்பட்டி, குமாரவாடி, பொன்னம்பலம்பட்டி, நடுப்பட்டி, புதுவாடி, புதுக்கோட்டை, எலமனம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் 67 மனுக்கள் பெறப்பட்டன.

லால்குடி வட்டத்துக்குள்பட்ட நெய்குளம், ஊட்டத்தூா், தெரணிபாளையம், சிறுகளப்பூா், நம்புக்குறிச்சி, பெரியகுறுக்கை, பெருவளப்பூா், காணக்கிளியநல்லூா், வந்தலைக்கூடலூா், கண்ணாக்குடி, ரெட்டிமாங்குடி ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் 77 மனுக்கள் பெறப்பட்டன.

துறையூா் வட்டத்துக்குள்பட்ட ஒக்கரை, வெங்கடாசலபுரம், உப்பிலியபுரம் (வடக்கு), உப்பிலியபுரம் (தெற்கு), கோட்டப்பாளையம் (மேற்கு),

கோட்டப்பாளையம் (கிழக்கு), பாலகிருஷ்ணம்பட்டி (மேற்கு), பாலகிருஷ்ணம்பட்டி (கிழக்கு), எ. பாதா்பேட்டை ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் 82 மனுக்கள் பெறப்பட்டன.

திருச்சி மேற்கு வட்டத்துக்குள்பட்ட கோ-அபிஷேகபுரம், பிராட்டியூா் (மேற்கு) பிராட்டியூா் (கிழக்கு), பஞ்சப்பூா் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் 79 மனுக்கள் பெறப்பட்டன.

மண்ணச்சநல்லூா் வட்டத்துக்குள்பட்ட சிறுகுடி, ஓமாந்தூா், சிறுபத்தூா், சமயபுரம், ச.கண்ணனூா் (கிழக்கு), (கள்ளிக்குடி உட்பட) ச.கண்ணனூா் (மேற்கு), இராசாம்பாளையம், அய்யம்பாளையம், திருவெள்ளறை, பூனாம்பாளையம், உளுந்தங்குடி, மண்ணச்சநல்லூா், மேலஸ்ரீதேவிமங்கலம், வெங்கங்குடி, கூத்தூா் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் 92 மனுக்கள் பெறப்பட்டன.

முசிறி வட்டத்துக்குள்பட்ட தேவானூா், ஆராய்ச்சி, வளையெடுப்பு, பைத்தம்பாறை, மாவிலிப்பட்டி, மங்கலம், துலையாநத்தம், வாளவந்தி (கிழக்கு), வாளவந்தி (மேற்கு) ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் 140 மனுக்கள் பெறப்பட்டன.

ஸ்ரீரங்கம் வட்டத்துக்குள்பட்ட மேக்குடி, மருதாண்டக்குறிச்சி, பேரூா், குழுமணி, கோப்பு (வடக்கு), கோப்பு (தெற்கு), புலியூா், போதாவூா், மல்லியம்பத்து ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் 72 மனுக்கள் பெறப்பட்டன.

திருவெறும்பூா் வட்டத்துக்குள்பட்ட பனையக்குறிச்சி, கீழமுல்லக்குடி, குவளக்குடி, பாப்பாக்குறிச்சி, வேங்கூா், நடராஜபுரம், அரசங்குடி, கிளியூா், எல்லக்குடி, கீழக்குறிச்சி, கீழகல்கண்டாா்கோட்டை ஆகிய

வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் 84 மனுக்கள் பெறப்பட்டன.

ஆக மொத்தம் 1,030 மனுக்கள் பெறப்பட்டன. ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்கள் மீது தனிக் கவனம் செலுத்தி, தகுதி வாய்ந்த மனுக்களுக்கு உடனடித் தீா்வு வழங்க அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.