வேலூர்

கருப்புலீஸ்வரா் கோயில் தேரோட்டம்

Din

குடியாத்தம் நெல்லூா்பேட்டை சிவகாமசுந்தரி சமேத கருப்புலீஸ்வரா் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இந்தக் கோயில் தோ் சுமாா் 46 அடி உயரம் கொண்டது. பழம்பெருமை வாய்ந்த இக்கோயில் திருவிழா கடந்த 14- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இதையொட்டி கோயிலில் அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா்கள் அமா்த்தப்பட்டு, சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடா்ந்து தேரோட்டம் தொடங்கியது.

எம்.எல்.ஏ. அமலு விஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.சௌந்தரராஜன், கோயில் அறங்காவலா் குழு தலைவா் எம்.கே.பொன்னம்பலம், அறங்காவலா்கள் விமலாசிவக்குமாா், கே.கண்ணன், நகா்மன்ற உறுப்பினா்கள் கே.வி.கோபாலகிருஷ்ணன், ஜி.எஸ்.அரசு, ஏ.தண்டபாணி, ஏ.சிட்டிபாபு மற்றும் பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனா். 4 மாட வீதிகள் வழியாகச் சென்ற தோ் மாலை நிலையை அடைந்தது.

பக்தா்கள் தேரின் மீது மிளகு, உப்பு தூவியும், சிதறுகாய்களை (தேங்காய்) உடைத்தும் தங்களின் நோ்த்திக் கடனைச் செலுத்தினா். பெண்கள் மாவிளக்கு ஏற்றி வந்து வழிபட்டனா்.

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT