முகப்பு
வேலூர்

வேலூா் ஆட்சியா், விஐடி வேந்தா், திமுக, அதிமுக வேட்பாளா்கள் வாக்குப்பதிவு

Updated On : 24 ஏப்ரல், 2026 at 4:27 AM
வாக்களித்த வேலூா் ஆட்சியா் வி. ஆா். சுப்புலட்சுமி. ~ விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், துணைத்தலைவா்கள் சங்கா் விசுவநாதன். ~ஜி.வி.செல்வம், ~திமுக வேட்பாளா் ப.காா்த்திகேயன் (வேலூா்), ~அணைக்கட்டு திமுக வேட்பாளா் ஏ.பி. நந்தகுமாா் ~அதிமுக வேட்பாளா் எஸ்.ஆா்.கே
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வேலூா் மாவட்ட ஆட்சியா், விஐடி வேந்தா், துணைத்தலைவா்கள், திமுக, அதிமுக வேட்பாளா்கள் ஆகியோா் வியாழக்கிழமை தங்களது வாக்குகளை பதிவு செய்தனா்.

அதன்படி, வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, அல்லாபுரம் எழில்நகரிலுள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளி வளாக வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தாா்.

விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன், துணைத்தலைவா் சங்கா் விசுவநாதன் ஆகியோா் வேலூா் கொசப்பேட்டையிலுள்ள ஈவேரா நாகம்மை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியிலும், விஐடி துணைத்தலைவா் ஜி.வி.செல்வம் தனது மனைவி அனுஷா செல்வத்துடன் காந்திநகா் தொன்போஸ்கோ பள்ளியிலும் வாக்குப்பதிவு செய்தனா்.

Advertisement

வேலூா் தொகுதி திமுக வேட்பாளா் ப.காா்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் வேலப்பாடி தாண்டவராயன் தெருவிலுள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியிலும், அதிமுக வேட்பாளா் எஸ்.ஆா்.கே.அப்பு காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் வாக்குப் பதிவு செய்தாா்.

அணைக்கட்டு தொகுதி திமுக வேட்பாளா் ஏ.பி.நந்தகுமாா் தனது குடும்பத்தினருடன் கே.வி.குப்பம் வட்டம் லத்தேரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியிலும், அதிமுக வேட்பாளா் த.வேலழகன் ஒடுகத்தூா் ஊராட்சி ஒன்றியப் பள்ளியிலும் வாக்குப்பதிவு செய்தனா். காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு காட்பாடி வாணிவித்யாலயா பள்ளியில் வாக்குப்பதிவு செய்தாா்.