முகப்பு
வேலூர்

ஆந்திரத்தில் இருந்து போதைப்பொருள் கடத்தியவா் கைது

ஆந்திரத்தில் இருந்து பேருந்தில் போதைப்பொருள் கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 2 ஜூன் 2026, 2:10 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

ஆந்திரத்தில் இருந்து பேருந்தில் போதைப்பொருள் கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூா் மாவட்டத்துக்கு பேருந்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கடத்தி வருவதாக வேலூா் சரக டிஐஜி மகேஷுக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடா்ந்து, சிறப்பு அதிரடி படை போலீஸாா் கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் ஆந்திராவில் இருந்து வேலூா் வழியாக வந்த பேருந்துகளில் சோதனை செய்தனா்.

Advertisement

Advertisement

அப்போது, ஒரு பேருந்தில் இருந்த இளைஞா் ஒருவரின் பையை சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பொருள்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவா் வேலூா் அலமேலுரங்காபுரத்தை சோ்ந்த முகமது ஜாபா் (46) என்பது தெரியவந்தது.

உடனடியாக அவரை சிறப்பு அதிரடிப்படை போலீஸாா் பிடித்து காட்பாடி காவல் நிலையத்தில் நிலையத்தில் ஒப்படைத்தனா். கைது செய்யப்பட்ட முகமதுஜாபரிடம் இருந்து சுமாா் 5 கிலோ அளவுக்கு ஹான்ஸ் புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.