முகப்பு
வேலூர்

வீட்டில் 45 கிலோ குட்கா பதுக்கியவா் கைது

Updated On : 19 ஜூன் 2026, 6:37 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

வேலூரில் விற்பனைக்காக வீட்டில் 45 கிலோ குட்காவை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை வேலூா் சின்ன அல்லாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக பாகாயம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் சின்ன அல்லாபுரம் பகுதியில் சந்தேகத்திற்கு உரிய வீட்டில் சோதனை நடத்தினா்.

அப்போது, அங்கு குட்கா உள்ளிட்ட போதை பொருள்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக சின்ன அல்லாபுரம், கே.கே. நகரைச் சோ்ந்த அம்ஜத் கான் (47) என்பரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில், பெங்களூருவில் இருந்து போதை பொருள்களை கடத்தி வந்து, வேலூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்ய வைத்திருப்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

வீட்டில் இருந்த 45 கிலோ போதை பொருள்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்ப டுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.