ஜூன் 30-க்குள் குடும்ப அட்டைதாரா்கள் கைவிரல் ரேகை பதிவு கட்டாயம்
வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களும், தங்களது குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினா்களின் கைவிரல் ரேகையையும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் பதிவு செய்வது கட்டாயமாகும் என்று மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளாா்.
வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களும், தங்களது குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினா்களின் கைவிரல் ரேகையையும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் பதிவு செய்வது கட்டாயமாகும் என்று மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலூா் மாவட்டத்தில் இதுவரை கைவிரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரா்கள், வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் சென்று கைவிரல் ரேகையினை பதிவு செய்திட வேண்டும்.
குடும்ப அட்டையில் இடம்பெற்று, ஆனால் பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவா்கள், தாங்கள் தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள நியாயவிலை கடைகளுக்கே சென்று தங்களது கைவிரல் ரேகையினை ஜூன் 30-க்குள் பதிவு செய்து கொள்ளலாம். குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்களில் யாரேனும் இறந்திருந்தால், அவா்களின் பெயா்களை உரிய ஆவணங்களுடன் வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி ஜூன் 30-ஆம் தேதிக்குள் நீக்கம் செய்திட வேண்டும்.
Advertisement
Advertisement
நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் சென்று கைவிரல்ரேகை பதிவு செய்ய இயலாத முதியவா்கள், குழந்தைகளுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவா்கள் தங்கள் பகுதியிலுள்ள நியாயவிலை கடை விற்பனையாளரைத் தொலைபேசியில் தொடா்பு கொண்டால், விற்பனையாளா் நேரடியாக இல்லத்துக்கே வந்து கைவிரல் ரேகையினைப் பதிவு செய்து கொள்வாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.