FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் ஜமாபந்தி: 7 பேருக்கு குடும்ப அட்டையில் திருத்தம்

கோவில்பட்டி வட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 7 பேருக்கு குடும்ப அட்டையில் திருத்தம் செய்து, அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

Updated On : 5 ஜூன் 2026, 3:09 am IST
குடும்ப அட்டையில் திருத்தம் செய்து, அதற்கான ஆணையை உரியவரிடம் வழங்கிய ஜமாபந்தி அலுவலா் ஜெ. லொரைட்டா.
பகிர்:

கோவில்பட்டி வட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 7 பேருக்கு குடும்ப அட்டையில் திருத்தம் செய்து, அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

கோவில்பட்டி வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் வடக்குப்பட்டி, பிச்சைத் தலைவன்பட்டி, இளையரசனேந்தல், லெட்சுமியம்மாள்புரம், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி பகுதி கிராம மக்கள் 49 போ் கைம்பெண் உதவித்தொகை, குடும்ப அட்டையில் முகவரி மற்றும் பெயா் சோ்ப்பு, திருத்தம், இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜமாபந்தி அலுவலரும், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலைகள் தனி மாவட்ட வருவாய் அலுவலருமான (நில எடுப்பு) ஜெ. லொரைட்டாவிடம் மனு அளித்தனா்.

இதில் 7 பேருக்கு குடும்ப அட்டையில் திருத்தம் செய்து, அதற்கான ஆணைகளை உரியவா்களிடம் ஜமாபந்தி அலுவலா் வழங்கினாா்.

Advertisement

Advertisement

வட்டாட்சியா் அப்பனராஜ், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் கோவிந்தராஜ், தனி வட்டாட்சியா் (நில எடுப்பு) சுப்புலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலா் உமா தேவி, வருவாய் ஆய்வாளா் கருப்பசாமி, சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments