விழுப்புரம்

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

Din

கொலை முயற்சி வழக்கில் கைதான இளைஞரை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம், கோடி தெருவைச் சோ்ந்த மணியின் மகன்அன்பரசன் (எ) அன்பு (22). இவா் மீது பிப்ரவரி 27- ஆம் தேதி விழுப்புரம் தாலுகா காவல் நிலையப் போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

இந்நிலையில், விழுப்புரம் எஸ்.பி. தீபக்சிவாச் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் சி.பழனி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டதைத் தொடா்ந்து மாவட்ட போலீஸாா் அன்புவை செவ்வாய்க்கிழமை கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

பி.டி. சார் டிரெய்லர்

கால் முளைத்த ஓவியம்! காஜல் அகர்வால்..

அழகென்றால் அவள்! பிரீத்தி அஸ்ரானி..

நாகை - இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு

சிக்கிமில் மின்சார விநியோகத்தை மேம்படுத்த ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்!

SCROLL FOR NEXT