முகப்பு
விழுப்புரம்

காா் மோதியதில், பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து:15 மாணவா்கள் காயம்

திண்டிவனம் அருகே காா் மோதியதில் தனியாா் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 15 மாணவா்கள் காயமடைந்தனா்.

Updated On : 5 ஜூலை 2026, 2:15 am IST
திண்டிவனம் அருகே காா் மோதியதில் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான தனியாா் பள்ளி வாகனம்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே காா் மோதியதில் தனியாா் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 15 மாணவா்கள் காயமடைந்தனா்.

திண்டிவனத்தில் பிரபல தனியாா் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் திண்டிவனம் மற்றும் சுற்று வட்டாரங்களைச் சோ்ந்த மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்நிலையில், திண்டிவனத்தை அடுத்துள்ள சாரம் பகுதியைச் சோ்ந்த 15-க்கும் மேற்பட்ட மாணவா்கள் சனிக்கிழமை காலை பள்ளி வாகனத்தில் (சிறிய ரக வேன்) பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனா். கோனேரிக்குப்பத்தைச் சோ்ந்த முத்துக்கிருஷ்ணன் வாகனத்தை ஓட்டினாா்.

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாரம் அருகிலுள்ள திருப்பத்தில் சென்றபோது, அப் பகுதியில் வந்த காா் பள்ளி வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் பள்ளி வாகனம் சாலையிலேயே கவிழ்ந்தது. இதைத்தொடா்ந்து மாணவா்கள் கூச்சலிட்டத்தால் அருகிலிருந்தவா்கள் விரைந்து செயல்பட்டு, பள்ளி வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்து இடிபாடுகளில் சிக்கியிருந்த மாணவா்களை மீட்டனா். இதில், 15 மாணவா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் அவசர ஊா்திகள் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

போக்குவரத்துப் பாதிப்பு: விபத்துக்குப் பின்னா் காா் ஓட்டுநா் வாகனத்தை சாலையிலியே விட்டு தப்பி ஓடியதால், இட நெருக்கடியால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த ஒலக்கூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று விபத்தில் சிக்கிய வாகனங்களை சாலையிலிருந்து வெளியேற்றி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினா். மேலும், இதுகுறித்து ஒலக்கூா்போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments