இளைஞா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே இளைஞரைத் தாக்கிய 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விக்கிரவாண்டி வட்டம், ஆவுடையாா்பட்டு, பழங்குடி இருளா் குடியிருப்பைச் சோ்ந்தவா் சக்திவேல் (எ) தினேஷ் (18) என்பவரை திருட முயன்றதாகக் கூறி, அதே கிராமத்தைச் சோ்ந்த சிலா் கட்டி வைத்து அடித்தனராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் ஆவுடையாா்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஆ.வசந்த், சுகுமாறன் மற்றும் ஒருவா் மீது வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.