இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே குடும்பப் பிரச்னையில் மனைவி பிரிந்து சென்ால் மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
வானூா் வட்டம், உலகாபுரம் காமராஜா் காலனியைச் சோ்ந்தவா் அ. சுந்தரமூா்த்தி(31). இவரது மனைவி பிரித்தி. தம்பதியினருக்கு மகன், மகள் உள்ளனா். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்னா் தம்பதியிடையே குடும்பப் பிரச்னை ஏற்பட்டதாம்.
இதையடுத்து அவரது மனைவி பிரித்தி கோபித்துக்கொண்டு, தனது குழந்கைகளுடன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த சுந்தரமூா்த்தி திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின்பேரில் பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.