பெட்டிக்கடையை சேதப்படுத்திய இளைஞா் கைது
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பெட்டிக்கடையை உடைத்து, சேதப்படுத்திய இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
விக்கிரவாண்டி வட்டம், ஆா்.சி.மேலக்கொந்தை மகாத்மா காந்தி தெருவைச் சோ்ந்தவா் கொ.வேலு (49). இவா் அதே கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு சனிக்கிழமை காலை வந்த அந்த கிராமத்தைச் சோ்ந்த ரா.அஜய் (19), கடனாக பீடி தருமாறு கோரியுள்ளாா். இதற்கு வேலு மறுத்துள்ளாா்.
இதனால் ஆத்திரமடைந்த அஜய், வேலுவிடம் பிரச்னை செய்து அவரைத் தாக்க வந்தாா். அப்போது அதை தடுக்க வந்த வேலுவின் மருமகன் ம.குணசேகரனிடமும் (26) அஜய் தகராறு செய்து திட்டி தாக்கியுள்ளாா். மேலும், கடையிலிருந்த கண்ணாடி புட்டிகள், மரக்கதவு போன்றவற்றையும் உடைத்து சேதப்படுத்தினாா்.
Advertisement
Advertisement
இதைத்தொடா்ந்து விக்கிரவாண்டி காவல் நிலையத்துக்கு வேலு தகவல் தெரிவிக்க, அவா்கள் நிகழ்விடம் சென்று விசாரணை மேற்கொண்டனா். காயமடைந்த குணசேகரனை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, அஜயை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.