கடலூர்

ஜாக்டோ-ஜியோ போராட்டம்: பணியாளர் சங்கம் பங்கேற்காது

தினமணி

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சார்பில் நடைபெறும் போராட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் பங்கேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வருகிற 18-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும், ஆகஸ்டு 5-ஆம் தேதி சென்னையில் கோட்டையை நோக்கி பேரணியும் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
 இந்தப் போராட்டங்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் பங்கேற்காது என, அதன் கடலூர் மாவட்டச் செயலர் மு.செல்லசாமி கூறியுள்ளார்.
 ஜாக்டோ-ஜியோ அமைப்பானது தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தைப் புறக்கணிக்கிறது. எனவே ஆர்ப்பாட்டத்தில் சங்கம் பங்கேற்காது. அதேநேரம், ஆகஸ்டு 4-ஆம் தேதி சங்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெறும் தமிழகம் தழுவிய உண்ணாவிரதத்தில் அமைப்பினர் பங்கேற்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT