கடலூர்

குறைதீர் நாள் கூட்டம்: 398 மனுக்கள் அளிப்பு

தினமணி

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 398 மனுக்கள் வரப் பெற்றன.
 கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தலைமை வகித்து, பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்து பொதுமக்கள் அளித்த 398 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
 மாற்றுத் திறனாளிகளுக்கென மனுக்கள் பெறுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்துக்குச் சென்று அவர்களிடம் மனுக்களைப் பெற்றார்.
 பொதுமக்கள் அளித்த மனுக்களைத் தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்கு உள்பட்டும் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்குத் தீர்வு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
 கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, தனித் துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கோவிந்தன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் நல அலுவலர் ராமு, மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர் மதிவாணன் உள்பட அனைத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

மூத்த வழக்குரைஞா்களுக்குப் பாராட்டு

குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம்

பெருந்துறை சோழீஸ்வரா் கோயிலில் குருப் பெயா்ச்சி விழா

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ஆசிரியா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT