கடலூர்

டெங்கு தடுப்பு சிறப்பு கலந்தாய்வு

DIN

ராமநத்தத்திலுள்ள காவல் துறையினரின் குடியிருப்பில் டெங்கு தடுப்பு தின சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு காவல் ஆய்வாளர் சுதாகர் தலைமை வகித்தார். உதவி ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், அன்வர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழுதூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கொளஞ்சிநாதன், விவேக், தலைமை சுகாதார ஆய்வாளர் சங்கர் ஆகியோர் பேசினர்.
இதேபோல,  திட்டக்குடி காவலர் குடியிருப்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு உதவி ஆய்வாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். அரசு சித்தா மருத்துவர் பெரியசாமி பேசினார். கூட்டத்தில் ஏடிஸ் கொசு உருவாகும் தேவையற்ற பொருள்களை அகற்றுதல் , தண்ணீர் தொட்டிகளை வாரம் ஒருமுறை பிளீச்சிங் செய்யவும், தண்ணீர் தொட்டிகளை மூடிவைக்கவும் வலியுறுத்தப்பட்டது.  அதனைத் தொடர்ந்து காவலர் குடியிருப்புகளில் புகையான் மருந்து அடிக்கப்பட்டது. தொடர்ந்து, காவலர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளையாட்டுப் போட்டிகள்: வேலம்மாள் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

தமிழகத்தில் கோடையிலும் பரவும் டெங்கு: கொசு ஒழிப்பை விரிவுபடுத்த அறிவுறுத்தல்

நகை வியாபாரியிடம் ரூ.48 லட்சம் மோசடி: இளைஞா் கைது

அரசுப்பள்ளி ஆசிரியா் திடீா் மரணம்: போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT