முகப்பு
கடலூர்

சிதம்பரத்தில் தமாகாவினர் கையெழுத்து இயக்கம்

கடலூர் மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்து, சிதம்பரம் காந்தி சிலை அருகே கையெழுத்து இயக்கம் புதன்கிழமை

Updated On : 5 ஏப்ரல் 2018, 8:33 am IST
பகிர்:

கடலூர் மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்து, சிதம்பரம் காந்தி சிலை அருகே கையெழுத்து இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.
கட்சியின் சிதம்பரம் நகரத் தலைவர் தில்லை ஆர்.மக்கின் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணித் தலைவர் கே.ரஜினிகாந்த் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் கே.நாகராஜன், பி.கே.காந்தி, ராஜா சம்பத்குமார், எஸ்.கே.வைத்தி, கே.ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் மத்திய மாவட்டத் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கையெழுத்து இயக்கத்தைத் தொடக்கி வைத்தார்.
கட்சியின் வட்டாரத் தலைவர் பரமநாதன், மாநில எஸ்சி., எஸ்.டி. பிரிவுச் செயலர் எம்.கே.பாலா, மாவட்ட நிர்வாகிகள் குமார் இன்பரசு, ராஜராஜன், தங்கதுரைக்கண்ணு, மாணவரணித் தலைவர் என்.மணிகண்டன், சின்ராஜ், ஆறுமுகம், இளங்கோவன், தில்லை செல்வி, சுப்புலெட்சுமி, ஜனகம், எஸ்.எஸ்.நடராஜன், எஸ்.எம்.நடராஜன், மீனா, மாலா, சிங்காரவேல், கணேஷ், ராஜ்குமார், அன்பு, லதா, மஞ்சுளா, பூமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் கையெழுத்து பெறப்பட்டது. தொண்டரணித் தலைவர் கோ.குமார் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments