கடலூர்

கொள்ளிடக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

DIN


கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடக்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தார்.
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழணைக்கு அதிகளவு உபரிநீர் வந்து கொண்டிருப்பதால் கொள்ளிடக் கரையோர கிராம மக்களுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். கீழணைக்கு கடந்த ஜூலை மாதம் 25-ஆம் தேதி கல்லணையிலிருந்து திறக்கப்பட்ட அதிகளவு தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியாக வந்தது. கீழணையின் உச்ச நீர்மட்டமான 9 அடி ஒரே நாளில் நிரம்பியது.
இந்த நிலையில், கர்நாடகத்தில் பெய்த மழைநீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டள்ளது. இதனால் 6 மாவட்டங்களின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கல்லணைக்கு வரும் உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்டு கீழணை பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை வரும் என்பதால் கீழணையின் கீழ் பகுதியில் கொள்ளிடம், வடவாறு, வடக்கு ராஜன் வாய்க்கால் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை கடலூர் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ளார்.
இதனை கருத்தில்கொண்டு காட்டுமன்னார்கோவில் தாசில்தார் சிவகாமசுந்தரி கொள்ளிடக் கரையோர மக்களுக்கு, கிராம நிர்வாக அலுவலர்கள் வாயிலாக ஆட்டோவில் ஒலிபெருக்கி கட்டி வெள்ள அபாய எச்சரிக்கை விட உத்தரவிட்டார். இதன்படி கஞ்சங்கொல்லை,கொண்டாயிறுப்பு எய்யலூர், முட்டம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அறிவிப்பு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

SCROLL FOR NEXT