FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வாஜ்பாய் மறைவு: அனைத்துக் கட்சியினர் அஞ்சலி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு கடலூர், சிதம்பரம், பண்ருட்டி பகுதிகளில் பாஜக, அனைத்து கட்சியினர் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலித்தினர்.

பகிர்:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு கடலூர், சிதம்பரம், பண்ருட்டி பகுதிகளில் பாஜக, அனைத்து கட்சியினர் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலித்தினர்.
 முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவால் புதுதில்லியில் வியாழக்கிழமை காலமானார். இதைத் தொடர்ந்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 மாவட்ட பாஜக பொதுச் செயலர் இரா.குணா தலைமையில், பாஜகவினர் அமைதிப் பேரணி நடத்தினர். பேருந்து நிலையம் அருகில் இருந்து தொடங்கிய பேரணி, நகர அரங்கில் முடிவுற்றது. அங்கு அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 பேரணியில், மாவட்ட பாஜக நிர்வாகிகள் மு.சக்திகணபதி, மருத்துவர் வி.கே.கணபதி, நகரத் தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 அதேபோல, கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், காமராஜர் சிலை முன்பு வாஜ்பாய் உருவப்படம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
 நிகழ்ச்சிக்கு அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சி.குமார் தலைமை வகித்தார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் எம்.குருராமலிங்கம், எம்.சுப்புராயன், கே.சிவாஜிகணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 சட்ட ஆலோசகர் தி.ச.திருமார்பன், தராசு மக்கள் மன்றத்தின் டி.துரைவேலு, சிவாஜி சமூக நலப் பேரவையின் க.தர்மராஜ், வெண்புறா பொது நலப் பேரவையின் எம்.சண்முகம் மற்றும் பல்வேறு நலச் சங்கங்களைச் சேர்ந்த எஸ்.சையதுமுஸ்தபா, சிவ.ரவிச்சந்திரன், பேராசிரியர் அ.அர்த்தநாரி, பாஜக நிர்வாகி சரவணமுத்து, இந்து முன்னணி நிர்வாகி மகாராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று வாஜ்பாய் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
 சிதம்பரத்தில்...
 சிதம்பரத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
 அந்த அமைப்பின் மாவட்ட சேவை பிரிவைச் சேர்ந்த ஜயமுரளி கோபிநாத் தலைமை வகித்தார். பாரதிய ஜனதா கட்சியின் நகரத் தலைவர் கனகசபை, விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாவட்டச் செயலர் ஜோதிகுருவாயூரப்பன், கார்த்திகேயன், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் எஸ்.பி.சரவணன், மாநில பிரசார செயலர் வெ.ராஜரத்தினம், மாநில இளைஞரணி பொருளாளர் கோபிநாத், கே.பி.டிசெழியன், ஆடிட்டர் பாலசுப்பிரமணியன், குருமூர்த்தி, மு.செங்குட்டுவன், அருள் உள்பட ஏராளமானோர் பங்கேற்று, சிதம்பரம் தெற்கு சன்னதியில் அலங்கரித்து வைக்கப்பட்ட வாஜ்பாய் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
 பண்ருட்டியில்...
 பண்ருட்டி பாஜக சார்பில் அனைத்துக் கட்சி மற்றும் வணிகர் சங்கங்கள் பங்கேற்ற அமைதி ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 மாவட்ட பாஜக பொதுச் செயலரும், பண்ருட்டி தொகுதி அமைப்பாளருமான ஆர்.எம்.செல்வக்குமார் தலைமை வகித்தார். பண்ருட்டி நகரத் தலைவர் எம்.செல்வம் முன்னிலை வகித்தார். அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் காந்தி சாலை வழியாக நான்கு முனை சந்திப்பை அடைந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
 நிகழ்ச்சியில், திமுக நகரச் செயலர் ராஜேந்திரன், காங்கிரஸ் கட்சி நிர்வாகி சபியுல்லா, இந்து மக்கள் கட்சி நிர்வாகி தேவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலர் உத்தராபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சக்திவேல், புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அர்சுணன், பாமக நிர்வாகி கோதண்டபாணி, மதிமுக ஒன்றியச் செயலர் நாகை.ஜெய்சங்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள் டி.சண்முகம், வி.வீரப்பன், மோகனகிருஷ்ணன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments