முகப்பு
கடலூர்

நீர்வழி ஆதாரங்களில் செயல்படும் மணல் குவாரிகளை மூட கோரிக்கை

நீர்வழி ஆதாரங்களில் செயல்படும் மணல் குவாரிகளை மூட வேண்டும் என தென்னக இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கம் கோரிக்கை விடுத்தது. 

Updated On : 23 ஜூலை 2018, 9:18 am IST
பகிர்:

நீர்வழி ஆதாரங்களில் செயல்படும் மணல் குவாரிகளை மூட வேண்டும் என தென்னக இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கம் கோரிக்கை விடுத்தது. 
இந்தக் சங்க நிர்வாகிகள் கூட்டம் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் சிவா தலைமை வகித்தார். வனராசு முன்னிலை வகித்தார். கிருஷ்ணன் வரவேற்றார். பேராசிரியர் பால்ராஜ், நாகலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பதை அடிப்படையாகக் கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து நீர் நிலைகளையும் மழைக் காலம் 
தொடங்குவதற்குள் தூர்வார வேண்டும். மழை நீர் வீணாகக் கடலில் கலக்காமல் தேக்கி வைத்து மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்வழி ஆதாரங்களில் செயல்படும் மணல் குவாரிகளை மூட வேண்டும். நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை கழிவு நீர் கெடிலத்தில் கலப்பதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments