கடலூர்

மணல் கடத்தல்: லாரி, பொக்லைன் பறிமுதல்

தினமணி

மணல் கடத்தல் தொடர்பாக லாரி, பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டன.
 ஆவினங்குடி காவல்நிலைய உதவி ஆய்வாளர் விண்டர்ராஜா வியாழக்கிழமை காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, அந்தப் பகுதியிலுள்ள வெள்ளாற்றிலிருந்து உரிய அனுமதி பெறாமல் மணல் எடுத்துச் சென்றதாக 14 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தார். இதேபோல புவனகிரி காவல்
 நிலைய உதவி ஆய்வாளர் சண்முகம் கீரப்பாளையம் வெள்ளாற்றில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஆற்றுக்குள் மணல் அள்ளிக்கொண்டிருந்த பொக்லைன் இயந்திரம், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்ததோடு, ஒருவரை கைது செய்தார்.
 அதேபோல விருத்தாசலம் காவல் நிலைய பகுதியில் 2 மாட்டு வண்டிகளும், திருப்பாதிரிபுலியூர் பகுதியில் ஒரு மாட்டு வண்டியும், திட்டக்குடி வதிஷ்டபுரத்தில் ஒரு மாட்டு வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டன.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

SCROLL FOR NEXT