சிதம்பரம் தொகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த ரூ.10 லட்சம் ஒதுக்கீடு
சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ரூ.10 லட்சம் நிதியை தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் ஒதுக்கீடு செய்தார்.
சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ரூ.10 லட்சம் நிதியை தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் ஒதுக்கீடு செய்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கடலூர் மாவட்டத்தில் குற்றங்களைத் தடுக்க கண்காணிப்பு (சிசிடிவி) கேமராக்கள் காவல் துறைக்கு உறுதுணையாக உள்ளன. இதைக் கருத்தில்கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மக்கள் கூடும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றார். மேலும் இந்தப் பணியை மாவட்டம் முழுவதும் விரிவுப்படுத்தி, குற்றங்களை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்று மாவட்ட ஆட்சியர் சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி முழுவதும் கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்திட எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளதாக அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.