டெங்கு விழிப்புணர்வுப் பேரணி
கடலூர் முதுநகரில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
கடலூர் முதுநகரில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
கடலூர் துறைமுகத்தில் இயங்கி வரும் புனித.பிரான்சிஸ் சவேரியார் நடுநிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு வாரம் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு டெங்கு பரவும் விதம், தடுக்கும் வழிமுறைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், சாரண இயக்க மாணவர்கள், இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் கடலூர் முதுநகரில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியை பள்ளி முதல்வர் சுந்தரவரதன் தொடக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணியில் பங்கேற்றவர்கள் தூய்மையின் அவசியம் குறித்து வலியுறுத்தினர்.
மேலும், டெங்கு காய்ச்சல் ஏன் ஏற்படுகிறது, டெங்குவை உருவாக்கும் ஏடிஸ் வகை கொசுக்கள் எப்படி உற்பத்தியாகின்றன, அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து, மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் டெங்குவை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். ஏற்பாடுகளை பள்ளியின் உடல்கல்வி ஆசிரியர் கு.காந்திரூபன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.