கடலூர்

குடிநீர் வழங்கக் கோரி காத்திருப்புப் போராட்டம்

தினமணி

குடிநீர் வழங்கக் கோரி, காட்டுமன்னார்கோவில் அருகே பெண்கள் காத்திருப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
 காட்டுமன்னார்கோவில் அருகே குணவாசல் ஊராட்சிக்கு உள்பட்ட திடீர்குப்பம் பகுதியில் சுமார் 30 குடும்பத்தினர் வசித்து வருகின்றர். இந்தப் பகுதியில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பகுதி பெண்கள் செவ்வாய்க்கிழமை காலிக் குடங்களுடன் காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தங்கள் பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி முடிந்தவுடன் மின் மோட்டார் அமைத்து குடிநீர் வழங்கப்படும். அ வரை தற்காலிகமாக ஆயங்குடி ஊராட்சி குடிநீர் தேக்க தொட்டியில் இணைப்பு பெற்று தண்ணீர் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
 இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பத்தூரில் சாரல் மழை

செல்லமுத்து மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

கடாம்பூரில் குடிநீரை சீராக விநியோகிக்க கோரிக்கை

கீழ்வேளூரில் 7-வது நாளாக மழை

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

SCROLL FOR NEXT