கடலூர்

கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

தினமணி

காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே. பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 முகாமில் ஸ்ரீபெரும்புதூர் தாய் சுமித் இந்தியா ஆட்டோ பார்ட்ஸ் நிறுவன மனித வள மேம்பாட்டுத் துறை மேலாளர் நேதாஜி, பிரதிநிதி மோகன்குமார், பொறியாளர் பிரதாப் ஆகியோர் பங்கேற்று மாணவர்களிடையே நேர்காணலை நடத்தினர்.
 நேர்காணலில் மெக்கானிக்கல் துறையில் 35 மாணவர்கள் பங்கேற்று 34 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சிவில் துறையில் 14 மாணவர்கள் பங்கேற்று 8 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். எலக்டிரிக்கல் (இஇஇ) துறையில் 13 மாணவர்கள் பங்கேற்று 8 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட 47 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
 தேர்வு பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி தலைவர் எம்.ஆர்.கே.பி.கதிரவன் வாழ்த்து தெரிவித்தார். முகாமுக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வெங்கடேசன், துணை முதல்வர் அறிவழகன் ஆகியோர் செய்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

ஆண்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு: 5 போ் கைது

SCROLL FOR NEXT