உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு காட்டுமன்னார்கோவிலில் உள்ள
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு காட்டுமன்னார்கோவிலில் உள்ள கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று மெளன அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் கலைமகள் கல்வி குழும நிறுவனர் வீர. முத்துக்குமரன், பள்ளி தாளாளர் அரிமா மு.பரணிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.