பூதாமூரில் ரூ.7 லட்சத்தில் குடிநீர் வசதி
பூதாமூரில் ரூ.7 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் வசதியை எம்எல்ஏ வி.டி.கலைச்செல்வன் தொடக்கி வைத்தார்.
பூதாமூரில் ரூ.7 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் வசதியை எம்எல்ஏ வி.டி.கலைச்செல்வன் தொடக்கி வைத்தார்.
விருத்தாசலம் நகராட்சிக்கு உள்பட்ட பூதாமூரில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில்
ரூ.7 லட்சத்தில்ஆழ்துளை கிணறு, மின் இணைப்புடன் கூடிய மோட்டார், குடிநீர் தொட்டி ஆகியவை அமைக்கப்பட்டன. இதனை, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. விருத்தாசலம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வி.டி.கலைச்செல்வன், குடிநீர் இணைப்பை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். அப்போது, பொதுமக்கள் நல்லாள குளத்தை துர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, அந்தக் குளத்தை பார்வையிட்ட எம்எல்ஏ, அதை தூர்வார உரிய
நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில், அமமுக அனைத்துல எம்ஜிஆர் மன்றத் தலைவர் சோழன் சம்சுதின், நகரச் செயலர் மார்கெட் நடராஜன், வட்ட செயலர் வடிவேலன், அருளாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.