கடலூர்

பள்ளிகளில் கணினி அறிவியலை கட்டாயப் பாடமாக்க வேண்டும்

DIN

பள்ளிகளில் கணினி அறிவியலை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது. 
இந்தச் சங்கத்தின் கடலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம், மாவட்ட செயலர் பொன்னுசாமி தலைமையில் திட்டக்குடியில் அண்மையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பாலாஜி முன்னிலை வகித்தார். தீர்மானங்களை விளக்கி மாவட்ட பொருளாளர் கு.ராஜ்குமார் பேசினார்.
கூட்டத்தில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 10 வரையிலான வகுப்புகளில் கணினி அறிவியலை கட்டாயப் பாடமாக அறிவிக்க வேண்டும். மேல்நிலை வகுப்புகளில் நடைமுறையில் இருக்கும் கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் உள்ளிட்ட 3 வகையான பாடங்களை மாணவர்களுக்கு முழுமையாக கற்றுத்தர கணினி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரந்தரமாக்க வேண்டும். புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப் பிரிவை உருவாக்கி பி.எட்., முடித்த கணினி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் 
நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT