கடலூர்

இலவச அக்குபஞ்சர் மருத்துவ முகாம்

DIN

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், சூஜாக் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் ஒரு வார கால இலவச அக்குபஞ்சர் மருத்துவ முகாம் சிதம்பரம் மாலைக்கட்டித் தெருவில் வியாழக்கிழமை தொடங்கியது.
முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவர்  எம்.தீபக்குமார் தலைமை வகித்தார். சாசனத் தலைவர் பி.முஹமதுயாசின் முன்னிலை வகித்தார். சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனை தலைமை மருத்துவர் பி.தழிழரசன் மருத்துவ முகாமை தொடக்கி வைத்தார். ரோட்டரி மாவட்ட துணைஆளுநர் எஸ்.நடனசபாபதி, மிஸ்ரிமல் மஹாவீர்சந்த் ஜெயின் டிரஸ்ட் தலைவர் எம்.கமல்கிஷோர்ஜெயின், எஸ்.ஆர்.ராமநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மருத்துவர் ஆர்.பி.பாட்டீல் தலைமையிலான மருத்துவக் குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். இவர்களுக்கு தாய் நர்சிங் கல்லூரி பயிற்சி மாணவிகள் உதவிகளை செய்தனர். 
முகாம் ஒருங்கிணைப்பாளர் ஏ.அஷ்ரப்அலி, முஹமது இப்ராஹிம், ரவிச்சந்திரன், சரவணன், ராஜசேகரன், பொற்செல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சுனில்குமார் போத்ரா நன்றி கூறினார் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: பேச்சிப்பாறை அணை மறுகால் மதகுகள் திறப்பு- திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆம்பூா் பேருந்து நிலைய உயா்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கஞ்சா புழக்கத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரப்பா் நாற்று தயாரிப்பு: மாணவிகள், சுய உதவிக் குழுவுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT