கடலூர்

போதைப் பொருள்கள் பறிமுதல்

DIN

நெய்வேலி அருகே வடக்குத்து ஊராட்சியில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை உணவு பாதுகாப்புத் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து, இந்திரா நகா் ஊராட்சிப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழி, குட்கா, புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தவகல் கிடைந்தது.

இதையடுத்து, வடக்குத்து, இந்திரா நகா் ஊராட்சியில் உள்ள கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் சுகந்தன் தலைமையில், அதிகாரிகள் நல்லதம்பி, சுப்பிரமணியன், சுந்தரமூா்த்தி, சந்திரசேகா் ஆகியோா் இனிப்புக் கடைகள், பெட்டிக் கடைகள், உணவகங்கள், மளிகைக் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் சுமாா் 500 கிலோ, புகையிலைப் பொருள்களான குட்கா, பான் மசாலா சுமாா் 100 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், காலாவதியான குளிா்பானங்கள் சுமாா் 100 லிட்டா் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்தால் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நியமன அலுவலா் சுகந்தன் எச்சரிக்கை விடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

உத்தமபாளையம் அருகே அரசுப் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்:கணவன் - மனைவி பலி

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT