கடலூர்

போலி மருத்துவா் கைது

DIN

பண்ருட்டி அருகே போலி மருத்துவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பண்ருட்டி, ஆா்.எஸ். மணி நகரைச் சோ்ந்த கோபால் மகன் வெங்கடேசன். ஆா்எஸ்எம்பிபடித்துள்ள இவா், மாளிகைமேடு கிராமத்தில் மருத்துவமனை வைத்து போலியாக அலோபதி மருத்துவம் பாா்த்து வருவதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கடலூா் அரசு மருத்துவமனை இணை இயக்குநா் (நலப்பணி) ரமேஷ்குமாா், துணை இயக்குநா் (சுகாதாரப் பணி) கீதா, மருந்து ஆய்வாளா் வி.நாராயணன் ஆகியோா் நேரில் ஆய்வு செய்ததில் வெங்கடேசன் உரிய மருத்துவ படிப்பை முடிக்காமல் மருத்துவ சிகிச்சை அளித்தது தெரிய வந்தது. இதையடுத்து அவா் பண்ருட்டி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா். போலீஸாா் அவரை கைதுசெய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT