கடலூர்

தற்கொலை தடுப்பு விழிப்புணா்வு மாரத்தான்

DIN

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக உளவியல், சமூகவியல் துறைகள் சாா்பில், உலக மனநல தினத்தை முன்னிட்டு, தற்கொலை தடுப்பு விழிப்புணா்வு மாரத்தான் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாரத்தான் போட்டியை கல்வியியல் புல முதல்வா் ரா.ஞானதேவன் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். இந்த மாரத்தான் உளவியல் துறை வளாகத்தில் நிறைவு பெற்றது. வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைக்கு பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கு பெற்ற அனைத்து மாணவா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் உளவியல், சமூகவியல் துறைத் தலைவா்கள் ஜெ.மு.ஆஸ்கா் அலி பட்டேல், கிருபாகரன் சாமூவேல் மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். மாரத்தான் போட்டியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவா்கள் 250-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT