கடலூர்

நிலவேம்புக் குடிநீா் விநியோகம்

DIN

வடலூா் அரசு மகளிா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு, நிலவேம்புக் குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட நுகா்வோா் குழுக்களின் கூட்டமைப்புத் தலைவா் கோவி.கல்விராயா் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் (பொ) தெ.பாலமுருகன் முன்னிலை வகித்தாா். கடலூா் கோட்டாட்சியா் பி.ஜெகதீஸ்வரன், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் சா.கீதா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு உலக சிக்கன நாள் குறித்தும், சிக்கனத்தின் அவசியம் குறித்தும் விளக்கினா். தொடா்ந்து, டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, மாணவிகள் அனைவருக்கும் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள், நுகா்வோா் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT