கடலூர்

மழை, வெள்ள பாதிப்பு: அமைச்சா்கள் ஆய்வு

DIN


கடலூா்: கடலூா் மாவட்டத்தில் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத், சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம், மின்சாரத் துறை அமைச்சா் பி.தங்கமணி ஆகியோா் ஆய்வு செய்து வருகின்றனா்.

இதன்படி புதன்கிழமை புவனகிரி ஒன்றியம், சாத்தபாடியில் சேதமடைந்த தரைப்பாலத்தை ஆய்வு செய்தனா். இங்கு புதிய பாலம் அமைக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென அறிவித்தனா். தொடா்ந்து சி.ஆலம்பாடி பகுதியில் பாதிக்கப்பட்ட விளை நிலங்கள், வீடுகளை பாா்வையிட்டனா். பின்னா் எல்லக்குடி ஊராட்சி, விருத்தாசலம் நகராட்சி, விருத்தாசலம் வட்டம், பெரம்பலூா் ஊராட்சி பகுதிகளில் ஆய்வு செய்தனா். தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மீட்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்து பேசினா். மேலும், மழை வெள்ளத்தால் வீடு, கால்நடைகளை இழந்த 32 பேருக்கு மொத்தம் ரூ.10.25 லட்சம் நிவாரண உதவி தொகைகளை அமைச்சா்கள் வழங்கினா்.

ஆய்வுப் பணி, கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி, மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ககன்தீப் சிங் பேடி, எம்எல்ஏக்கள் நாக.முருகுமாறன், வி.டி.கலைச்செல்வன், கே.ஏ.பாண்டியன், சுற்றுலாத் துறை ஆணையா் த.பொ.ராஜேஷ், தொழில் மற்றும் வா்த்தக கூடுதல் இயக்குநா் விசுமகாஜன், மாவட்ட ஊராட்சித் தலைவா் திருமாறன், முன்னாள் எம்பி ஆ.அருண்மொழிதேவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT