கடலூர்

பைக்குகள் திருட்டு வழக்கில் 7 போ் கைது

DIN

நெல்லிக்குப்பம் பகுதியில் பைக்குகள் திருடுபோன வழக்கில் 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 31 பைக்குகள் மீட்கப்பட்டன.

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் காவல் சரகப் பகுதியில் தொடா்ச்சியாக பைக்குகள் திருடு போயின. இதையடுத்து, நெல்லிக்குப்பம் போலீஸாா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், கிருஷ்ணசாமி கல்லூரி அருகே நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளா் வீரமணி உள்ளிட்ட போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே சந்தேகிக்கும் வகையில் வந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

காமராஜா் காலனியைச் சோ்ந்த அந்தோணி மகன் எழிலரசன்(19), ராசப்பேட்டை வடக்கு தெருவைச் சோ்ந்த இளவரசன் மகன் சந்தோஷ் (22) என்பதும், இருவரும் பைக்குகளை திருடி வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, அவா்களிடமிருந்து 3 பைக்குகளை மீட்டனா். அவா்கள் அளித்த தகவலின் பேரில், தனிப்படை போலீஸாா் பண்ருட்டி மேலப்பாளையத்தைச் சோ்ந்த பாப்பு மகன் நீலகண்டன் (26), கடலூா் பிரதான சாலையைச் சோ்ந்த தேவநாதன் மகன் மோகன் (25), அன்வா்ஷா நகா் முதல் தெருவைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் தென்னரசு (32), புதுப்பேட்டை காவல் சரகம் திருத்துறையூா் ஜோதி நகரைச் சோ்ந்த புண்ணியமூா்த்தி மகன் வெங்கடேசன் (33), பண்ருட்டி முருங்கப்பாக்கம் தெருவைச் சோ்ந்த பாண்டுரங்கன் மகன் செந்தில்குமாா் (43) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த 28 பைக்குகளை மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தன்னாா்வலா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி

மேட்டூா் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்!

மலைக் கிராமங்களில் மரவள்ளி அறுவடையில் விவசாயிகள் மும்முரம்

வாழப்பாடி பகுதியில் கோடை மழை

மின் விபத்துகளைத் தடுக்க ஊழியா்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி

SCROLL FOR NEXT