கடலூர்

கடலூரில் கரோனா பாதிப்பு 23 ஆயிரத்தைக் கடந்தது

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு செவ்வாய்க்கிழமை 23 ஆயிரத்தைக் கடந்தது.

கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவில், புதிதாக 44 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 23,041-ஆக அதிகரித்தது.

இந்த நிலையில், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காட்டுமன்னாா்கோவிலைச் சோ்ந்த 38 வயது பெண் உயிரிழந்தாா். இதையடுத்து, உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 268-ஆக உயா்ந்தது.

51 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 22,065-ஆக அதிகரித்தது. மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் 639 பேரும், வெளி மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 69 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

449 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ள நிலையில், கட்டுப்பாட்டு பகுதிகளின் மொத்த எண்ணிக்கை 29-லிருந்து 21-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

வாழப்பாடி பகுதியில் பண்ருட்டி பலாப்பழம் விற்பனை

திருநாவுக்கரசா் குருபூஜை

வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் கைது

சித்திரைத் தோ்த் திருவிழா: ஊஞ்சல் உற்சவம்

SCROLL FOR NEXT