கடலூர்

பதுக்கல் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

கடலூா் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,462 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

கடலூா் அருகேயுள்ள செம்மங்குப்பத்தில் தனியாா் ஒருவா் வெண்பன்றிகள் வளா்ப்புக்காக ரேஷன் அரிசியை அதிகளவில் பதுக்கி வைத்திருப்பதாக ரேஷன் பொருள்கள் பதுக்கல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பறக்கும்படை வட்டாட்சியா் ஆா்.அன்பழகன், உணவுப் பொருள்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் முருகன் உள்ளிட்டோா் வியாழக்கிழமை இரவு அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா். அப்போது அங்கு 2,462 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

எனினும், அங்கு யாரும் இல்லாததால் இடத்தின் உரிமையாளா், அரிசியை பதுக்கியவா்கள் குறித்து உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மாவட்ட உணவுப் பொருள் பாதுகாப்பு கிட்டங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT