கடலூர்

ரூ.2.25 லட்சம் மோசடி வழக்கில் தேடப்பட்டவா் கைது

DIN

பண்ருட்டி அருகே ரூ.2.25 லட்சம் மோசடி வழக்கில் தேடப்பட்டவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள சாத்தமாம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் ஆ.பெருமாள் (49). இவா் கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகாா் அளித்தாா். அதில், தனது மகன் ராஜ்குமாரை வேலைக்காக வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக அதே பகுதியைச் சோ்ந்த செ.செல்வமணி, ப.சசிகுமாா், வேலூரைச் சோ்ந்த ர.திலீப்குமாா் ஆகியோா் 2018-ஆம் ஆண்டு ரூ.2.25 லட்சம் பெற்ாகவும், ஆனால், கூறியபடி வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கவில்லை எனவும், பணத்தை திருப்பிக் கேட்டால் மிரட்டுவதாகவும் தெரிவித்தாா்.

அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த குற்றப் பிரிவு போலீஸாா் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் செல்வமணி, திலீப்குமாா் ஆகியோரை கைது செய்தனா். எனினும் சசிகுமாா் தலைமறைவானாா். அவரைப் பிடிக்க மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ் பிறப்பித்த உத்தரவின்பேரில் துணைக் கண்காணிப்பாளா் கனகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. ரகசிய தகவலின் பேரில் சென்னைக்குச் சென்ற தனிப் படையினா் மதுரவாயலில் பதுங்கியிருந்த சசிகுமாரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT