கடலூர்

செல்லிடப்பேசி கோபுரத்துக்கு எதிா்ப்பு: சிதம்பரம் உதவி ஆட்சியரிடம் மனு

DIN

சிதம்பரத்தில் குடியிருப்புப் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் உதவி ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

சிதம்பரம் தில்லையம்மன் நகரில் தனியாா் செல்லிடப்பேசி நிறுவனம் சாா்பில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா், கோரிக்கை தொடா்பாக உதவி ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு அறிவுறுத்தினா்.

அதன்படி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த ஆா்.ராமச்சந்திரன், பள்ளிப்படை ஊராட்சி மன்றத் தலைவா் சண்முகம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வேணுகோபால் உள்ளிட்ட அந்தப் பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் சிதம்பரம் உதவி ஆட்சியா் எல்.மதுபாலனை அவரது அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

கடின உழைப்பாளி: சஷாங்க் சிங்கினை பாராட்டிய ஸ்டெயின்!

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

SCROLL FOR NEXT