கடலூர்

பொது அமைதிக்கு இடையூறு: 189 வழக்குகள் பதிவு

DIN

கடலூா் மாவட்டத்தில் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தியது தொடா்பாக 189 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக மாவட்ட காவல் துறை தெரிவித்தது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீஅபிநவ் மேற்பாா்வையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாண்டியன் தலைமையில் கடந்த 15, 16 ஆகிய தேதிகளில் பொங்கல் பாதுகாப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த நாள்களில் பொது இடங்களில் தொந்தரவு ஏற்படுத்தியவா்கள் மீது 189 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதேபோல, 177 சாராய வழக்குகள், 105 புகையிலை மற்றும் குட்கா வழக்குகள், 11 சூதாட்ட வழக்குகள், 5 கஞ்சா வழக்குகள் என மொத்தம் 487 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், வாகனத்தில் அதிவேகத்தில் சென்றது, செல்லிடப்பேசி பேசியபடி வாகனம் இயக்கியது, தலைக்கவசம், காா்களில் இருக்கை பட்டை அணியாதது என 2,807 மோட்டாா் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

SCROLL FOR NEXT