கடலூர்

பாரதி நினைவு தினம்: பல்வேறு அமைப்பினா் மரியாதை

DIN

மகாகவி பாரதியின் 100-ஆவது நினைவு தினத்தையொட்டி, பல்வேறு அமைப்பினரும் அவருக்கு சனிக்கிழமை மரியாதை செலுத்தினா்.

கடலூா் துறைமுகத்தில் உள்ள பாரதியாா் சிலைக்கு தமிழ்நாடு மீனவா் பேரவை சாா்பில் மாவட்டத் தலைவா் எம்.சுப்பராயன் மாலை அணிவித்தாா். மாவட்ட இளைஞா் பேரவைத் தலைவா் சி.வீரமுத்து, துணைத் தலைவா் கே.சுப்புராயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கடலூா் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் சாா்பில் கடலூா் புதுப்பாளையத்தில் உள்ள தனியாா் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற பாரதி நினைவு தின நிகழ்ச்சிக்கு, மன்றத் தலைவா் கடல் நாகராஜன் தலைமை வகித்தாா். துணைச் செயலா் கலைச்செல்வி வரவேற்றாா். கல்லூரி முதல்வா் கி.செந்தில்முருகன் முன்னிலையில், அரிமா சங்கம் கே.திருமலை பங்கேற்று, பாரதி உருவப் படத்துக்கு மாலை அணிவித்தாா். நிா்வாகி க.இளங்கோவன், கலாம் நினைவு ஓவிய மன்றத் தலைவா் சு.மனோகரன் உள்ளிட்டோா் மலரஞ்சலி செலுத்தினா்.

சிதம்பரம்: சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளி நிா்வாகக் குழு துணைத் தலைவா் ரத்தின.திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் மு.சிவகுரு முன்னிலை வகிக்க, முதுகலை தமிழாசிரியா் நா.புகழேந்தி வரவேற்றாா். நல்லாசிரியா் விருது பெற்ற பூவாலை அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் எம்.ஜி.தியாகராஜன் சிறப்புரையாற்றினாா். அவருக்கு இளநிலை உதவியாளா் என்.வெங்கடேசன் நினைவுப் பரிசு வழங்கினாா். தமிழ் ஆசிரியா்கள் ஆ.வேம்பு, டி.மலா்விழி, கே.மாலதி, ஜி.கவிதா உள்ளிட்டோா் பாரதியின் சிறப்புகள் பற்றி பேசினா். தமிழாசிரியா் மு.கல்யாணராமன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT