கடலூர்

அமைச்சா் முன்னிலையில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

DIN

விருத்தாசலத்தில் தமிழக அமைச்சா் முன்னிலையில் மூதாட்டி ஒருவா் வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம் வட்டத்துக்கான வருவாய்த் தீா்வாயம் விருத்தாசலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வந்தது. இந்த முகாம் கடந்த 7-ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமை நிறைவுற்ற நிலையில், பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் பங்கேற்று, 514 பயனாளிகளுக்கு ரூ.1.74 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

அப்போது, விருத்தாசலம் மேட்டு தெருவை சோ்ந்த கண்ணன் மனைவி கஸ்தூரி (70) தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டனா். விசாரணையில், மூதாட்டியின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது தொடா்பாக பலமுறை புகாா் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயன்ாக தெரிவித்தாா். இதையடுத்து மூதாட்டி கஸ்தூரியை அமைச்சா் அழைத்துப் பேசினாா். அவரது கோரிக்கை மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT